மூன்று வருடம் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. கட்டாய செக்ஸ்..! எம்.பியின் அந்தரங்க வீடியோ லீக்.. பெண் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

mp affair vedio

உத்தரபிரதேசத்தின் நாகினா தொகுதி எம்.பி.வும், பீம் ஆர்மி நிறுவனருமான சந்திரசேகர் ஆசாத் மீது முனைவர் பட்ட டாக்டர் ரோகிணி கவ்ரி பாலியல் துன்புறுத்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.


இந்தூரைச் சேர்ந்த ரோகிணி கவ்ரி, தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து ஒரு அரசு சாரா அமைப்பை நடத்தி வருகிறார். சந்திரசேகருடன் மூன்று வருடங்களாக தனிப்பட்ட உறவில் இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தெரிவித்தார். அதேசமயம், அவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

தேசிய மகளிர் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருந்தாலும், டெல்லி போலீசார் FIR பதிவு செய்ய மறுக்கிறார்கள் எனக் கூறினார். போலீசார் செல்வாக்கு மிக்க நபர்களுடன் கை கோர்த்து செயல்படுகிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார். இதோடு, தனது குற்றச்சாட்டுக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தன்னை தள்ளுவார்கள் எனவும் அவர் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, “நீதி கிடைக்காவிட்டால் ஐ.நா. மேடையில் உயிரை மாய்த்துக்கொள்வேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம், சந்திரசேகர் ஆசாத் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

English Summary

Bhim Army chief’s private video leaked, Rohini threatens suicide on social media

Next Post

இன்று உலக நுரையீரல் தினம்!. காற்று மாசுபாட்டிலிருந்து நுரையீரலை எவ்வாறு பாதுகாப்பது?. 3 முக்கிய விஷயங்கள் இதோ!.

Thu Sep 25 , 2025
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி, உலகம் முழுவதும் உலக நுரையீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் நமது நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதையும், மாசுபாடு, புகைபிடித்தல் மற்றும் மாறிவரும் காலநிலையால் அவை எவ்வளவு விரைவாக பலவீனமடையக்கூடும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த ஆண்டு, 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “ஆரோக்கியமான நுரையீரல், ஆரோக்கியமான வாழ்க்கை”, இது இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நாட்டின் காற்றின் தரம் தொடர்ந்து […]
World Lung Day

You May Like