தீயாய் பரவும் பறவைக் காய்ச்சல்..!! தமிழக எல்லைகளில் தீவிர சோதனை..!! உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா..?

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தீவிரமாக இருப்பதால், அந்த காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

அதேபோல், கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்தால் அவை என்ன பொருட்கள் என்று வாகனம் முழுவதுமாக சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடைத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லையில் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள், பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடும். காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More : உங்களுக்கு பறவைக் காய்ச்சலா..? இந்த அறிகுறிகள் இருக்கா..? உடனே மருத்துவமனைக்கு போங்க..!!

Chella

Next Post

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! கட்டணம் அதிரடியாக உயருகிறது..!! வெளியான திடீர் அறிவிப்பு..!!

Wed Apr 24 , 2024
சென்னையில் 2015 முதல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மெட்ரோ ரயில் இயங்கி, பொது போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை, 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை 2026 இறுதிக்குள் முடித்து, […]

You May Like