தேர்தல் விதிகளை மீறிய பாஜக..!! என்ன இப்படி பண்ணிட்டாங்க..!! திமுக பரபரப்பு புகார்..!!

இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவித்துள்ள பாஜக மீது நடவடிக்கை கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக புகார் கடிதம் எழுதியுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த புகாரில், ‘போல் சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜ விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு, பாஜக தேர்தல் போனஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்தால் ரூ.5 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-ம் பிரிவின்படி குற்றமாகும். அதன்படி, எந்தவொரு வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ, யாருக்கும் பரிசுப் பொருளை அளித்தாலோ அல்லது அளிப்பதாக வாக்கு கொடுத்தாலோ அது லஞ்சமாக அமைகிறது. இதுபோன்ற குற்றத்தை அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் உள்ளது.

இது வேட்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதால் இந்திய தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு பாஜக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின்படி, பாஜவுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை..!! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிரடி..!!

Chella

Next Post

TERRORISM | பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்.!! 5 சீனர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி.!!

Tue Mar 26 , 2024
TERRORISM: பாகிஸ்தான் நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் சீனாவை(CHINA) சேர்ந்த 5 பொறியாளர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர. பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லையில் இருக்கும் மாகாணமான கைபர் பக்துன்க்வா பகுதியில் உள்ள பிஷாம் தெஹ்சி என்ற பகுதியில் நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 5 சீனர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் தீவிரமாக […]

You May Like