இந்திய ஜனநாயகத்தை பாஜக கொள்ளையடிக்கிறது.. இனியும் அமைதியாக இருக்க மாட்டோம்..!! – பொங்கியெழுந்த ஸ்டாலின்

tamilnadu cm mk stalin

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில், ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.


பாஜகவுடன் கூட்டு சேர்ந்து, தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். குறிப்பாக, பெங்களூரு (மத்திய) மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்குத்திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.

அரசியல் ரீதியாக நீக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வாக்குத் திருட்டு முறைகேடு குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப்பகலில் பாஜக கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: KTM பிரியர்களே ரெடியா..? இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் கேடிஎம் 160 டியூக்.. விலை இதுதான்..!!

English Summary

BJP is robbing Indian democracy.. We will not remain silent anymore..!! – Stalin

Next Post

அடடே..!! எடை இழப்புக்கு உதவும் இளநீர்..!! இந்த பிரச்சனைக்கும் தீர்வா..? காலையில் எழுந்ததும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Aug 11 , 2025
காலை நேரத்தை ஆரோக்கியமான முறையில் துவங்கினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். பெரும்பாலானோர் தங்கள் நாளை தேநீர் அல்லது காஃபியுடன் ஆரம்பிப்பது வழக்கமாக இருக்கும். ஆனால், சிறிய ஒரு மாற்றம் கூட உங்கள் உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு இளநீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இது இயற்கையானது, சத்து நிறைந்தது, மேலும் பல நன்மைகளும் கொண்டது. செரிமானம் : இளநீரில் உள்ள இயற்கையான நொதிகள் மற்றும் […]
benefits of tender coconut water 1

You May Like