“விசில் ஊதினால் சளி போயிடும்.. இதயம் நல்லா வேலை செய்யும்..” செங்கோட்டையன் நூதனப் பிரச்சாரம்..!

sengottaiyan tvk

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் களைகட்டி உள்ளது.. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.. தேர்தலுக்கு இன்னும் முழுமையாக 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரதான கட்சிகள் தீவிரமாக தேர்தல் களப்பணியில் ஈடுபட்டுள்ளன..


ஆனால் அனல் பறக்கும் அரசியல் களத்திலும் தேர்தலில் வேகம் காட்டாத ஒரே கட்சி என்றால் அது விஜய்யின் தவெக தான்.. தவெக தலைவர் விஜய்யும் முழு வீச்சில் இன்னும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. காவல்துறை அனுமதி மறுப்பதாக தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.. தவெகவின் அடுத்தக் கட்ட தலைவர்களும் பெரிதாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.. மேலும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் தவெக வேட்பாளர்களும் தன்னந்தனியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்..

அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த தவெக சார்பில் கோபி தொகுதியில் களமிறங்குகிறார்.. அவர் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.. அப்போது பேசிய செங்கோட்டையன் “ நமது விசில் சின்னத்திற்கு ஒரு பெருமை உண்டு.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, விசில் சின்னம் தான் இந்தியாவையே ஆளப்போகிறது.

சின்னக் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும் சளி நின்று போய்விடும்.. மூச்சு பயிற்சி வேண்டும் என்பார்கள்.. முதியவர்கள் விசில் அடித்தால் இதயம் நன்றாக வேலை செய்யும்..இயற்கையோடு நாம் வாழ்கிறோம். அதனால் தான் நமக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது..” என்று தெரிவித்தார்..

Read More : வில்லிவாக்கம் டூ தி.நகர்.. போலீஸ் போட்ட கண்டிஷனால் பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்..!

RUPA

Next Post

நீரிழிவு நோயாளிகளுக்கு எச்சரிக்கை: கோடைக்காலத்தில் இந்த 3 பொருட்களைச் சாப்பிடுவது விஷத்திற்கு சமம்..!

Mon Apr 6 , 2026
கோடை காலம் நெருங்கும்போது, ​​வெப்பநிலையும் உயர்கிறது. இது பல உடல்நலச் சவால்களை உருவாக்குகிறது. நீரிழிவு மேலாண்மை நிபுணர்கள், நீரிழிவு நோயாளிகள் இக்காலகட்டத்தில் தங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். குறிப்பாக, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இச்சமயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கோடை காலத்தில் நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க உதவும் முக்கிய காரணிகள் எவை? ஆரோக்கியமாக இருக்க எத்தகைய உணவுகளை உட்கொள்ள வேண்டும்? […]
summer care 1

You May Like