நடுக்கடலில் கவிழ்ந்த படகு!. 270 பயணிகளின் நிலை என்ன?. சோகத்தில் முடிந்த கடல் பயணம்!. மீட்பு பணிகள் தீவிரம்!.

Cyprus boat accident 30kb

வடக்கு சைப்ரஸ் கடற்கரை அருகே சுமார் 270 பயணிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 237 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை, கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தசுக்கு (Tasucu) துறைமுகத்திற்குச் சென்ற ‘காடமரன்’ (Catamaran) வகைப் படகு விபத்துக்குள்ளானது. படகு புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே, மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாகப் படகில் நீர் புகத் தொடங்கியது. டயானா கடற்கரையிலிருந்து சுமார் 7.5 கிலோமீட்டர் தொலைவில் படகு முற்றிலுமாக கவிழ்ந்தது.

இந்தப் படகில் பயணம் செய்த 270 பேரில், இதுவரை 237 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 24 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக வடக்கு சைப்ரஸ் பிரதமர் உனல் உஸ்டெல் தெரிவித்துள்ளார்.

இதேபோல, கடந்த ஜூலை மாதம் வியட்நாமில் நடந்த மற்றொரு படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த செய்தியும் தற்போது கவனம் பெற்றுள்ளது. குறைந்த செலவில் சொகுசுப் பயணம் மற்றும் எளிமையான விசா நடைமுறைகள் காரணமாக, இந்தியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக வியட்நாம் திகழ்கிறது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7.46 லட்சம் இந்தியர்கள் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

1.1 ஓவரில் 0 ரன், 3 விக்கெட்!. மிரட்டல் பந்துவீச்சு!. ஆடவர் அணி கூட செய்யாத அபார சாதனை!. சரித்திரம் படைத்த தீப்தி ஷர்மா!.

Mon Aug 31 , 2026
துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரின் தொடக்கப் போட்டியில், தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. தனது 150-வது டி20 போட்டியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா, இதுவரை எந்தவொரு இந்திய ஆடவர் அல்லது மகளிர் கிரிக்கெட் வீரரும் செய்யாத மாபெரும் உலக சாதனைகளைப் படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். தாய்லாந்து அணிக்கு எதிரான இந்தப் […]
Deepti Sharma creates history 11zon

You May Like