சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று வீட்டில் சோதனை செய்தனர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் எடுத்த விடுத்த தகவல் பொய் என தெரியவந்தது.
முன்னதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக இன்று அதிகாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் கூறினார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தினர்.
போலீசாரின் சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கும், தமிழக அரசியலில் புதிதாக களம் இறங்கிய தவெக தலைவர் விஜய் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 173 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் காட்சி..!! நடந்தது என்ன..?