அமீபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கேரளாவில் பரவி வருவதாக கூறப்படும் அமீபா வைரஸ் என்பது தொற்றுநோய் அல்ல. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள குளம் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பதினால் அந்த நீரில் தேங்கியுள்ள வைரஸ் மனிதனின் மூக்கின் வழியாக மூளையை சென்று உயிரைழைப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்கள் தேங்கியுள்ள நேரில் குளிப்பதால் மட்டுமே இது போன்ற பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. ஓடும் நேரில் குளிப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் அமீபா வைரஸ் அச்சப்படத் தேவையில்லை.கேரளா மட்டுமல்ல தமிழ்நாட்டில் கூட நீண்ட நாட்கள் தேங்கியிருக்கும் குளம் குட்டைகள் மற்றும் பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அறிகுறிகள் & சிகிச்சை
மூளை திசுக்களை திண்ணும் இந்த அரிய வகை அமீபா மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை அமீபா உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால், மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தொடக்கத்தில் ஏற்படும். பின்னர், கழுத்து விறைப்பு, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
சிகிச்சை தாமதமாகத் தொடங்கினால், இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூஞ்சை காளான் மருந்துகளும், பிற சிகிச்சைகளும் இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த உதவும். சுத்திகரிக்கப்படாத நீரில் நீச்சல் அடிப்பதையும், மூக்கினுள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம். மூக்கில் நீர் செல்லும் வாய்ப்பு உள்ள இடங்களில், மூக்கை மூடுவது நல்லது.



