Breaking : 94.31% பேர் தேர்ச்சி..! 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்த மாவட்டம் முதலிடம்..?

school AI 2025

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்தனர்.. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் நேரடியாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பள்ளியில் வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பத்தின் போது பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 78452 52525 என்ற எண்ணை மொபைல் தொடர்புகளில் சேமித்து வைத்து வாட்ஸ் அப் உரையாடல் மூலமும் தேர்வு முடிவுகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.. அதன்படி 2025-26 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்..

அதாவது தமிழ்நாட்டில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 82.11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்..

தமிழ்நாட்டிலேயே 97.57 % தேர்ச்சி விகிதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது.. 97.54% தேர்ச்சி உடன் சிவகங்கை 2-வது இடத்திலும், 97.41 % தேர்ச்சி உடன் தஞ்சாவூர் 3-வது இடத்திலும் உள்ளது.. 97.31% தேர்ச்சி உடன் திருச்சி 4-வது இடத்திலும், 97.30 % தேர்ச்சி உடன் கன்னியாகுமரி 5-வது இடத்திலும் உள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.47% மாணவிகளும், 92.15% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்..

பாடவாரியான தேர்ச்சி விழுக்காடு

தமிழ் : 98.43%

ஆங்கிலம் : 99.44%

கணக்கு : 97.36%

அறிவியல் : 98.0%

சமூக அறிவியல் : 97.93%

Read More : ஜில்லா பட பாணியில் சென்னை ரவுடிகளை ஒரே இரவில் தட்டி தூக்கிய தமிழ்நாடு காவல்துறை..! அதிரடி வேட்டை..

English Summary

The results for the 2026 Class 10 Public Examinations in Tamil Nadu have been released.

RUPA

Next Post

Flash : 10-ம் வகுப்பு மறு தேர்வு தேதி அறிவிப்பு..!

Wed May 20 , 2026
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.. அதன்படி 2025-26 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அதாவது தமிழ்நாட்டில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 82.11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.. தமிழ்நாட்டிலேயே 97.57 % தேர்ச்சி விகிதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் […]
School Exam 2025

You May Like