தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.. அதன்படி 2025-26 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அதாவது தமிழ்நாட்டில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 82.11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்..
தமிழ்நாட்டிலேயே 97.57 % தேர்ச்சி விகிதத்துடன் புதுக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது.. 97.54% தேர்ச்சி உடன் சிவகங்கை 2-வது இடத்திலும், 97.41 % தேர்ச்சி உடன் தஞ்சாவூர் 3-வது இடத்திலும் உள்ளது.. 97.31% தேர்ச்சி உடன் திருச்சி 4-வது இடத்திலும், 97.30 % தேர்ச்சி உடன் கன்னியாகுமரி 5-வது இடத்திலும் உள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.47% மாணவிகளும், 92.15% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்..
இந்த நிலையில் 10-ம் பொதுத்தேர்வில் வெற்றி பெற இயலாதவர்களுக்கான மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜூலை 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மறு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 22-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..



