ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசியதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.. இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக 2019, 2021, 2024 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்..
மேலும் “ அதிமுகவில் சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் எடப்பாடி இருக்கிறார்.. அதிமுகவில் இருந்து நான் நான் நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.. கண்ணீர் வடிக்கிறேன்.. எடப்பாடி அதிமுகவுக்கு வருவதற்கு முன்பே அதிமுக எம்.எ.ஏவாக இருந்தவன் நான்.. 1972 முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறேன்..
53 ஆண்டுகாலம் பணியாற்றிய எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம்.. அந்தியூர் தொகுதி தோல்விக்கு எனது துரோகம் காரணம் என இபிஎஸ் பேசியிருக்கிறார்.. துரோகம் என்று சொன்னாலே அதில் நோபல் பரிசு பெற வேண்டியவர் எடப்பாடி பழனிசாமி.. சசிகலாவிடம் இருந்து எடப்பாடி எப்படி முதல்வர் பதவியை பெற்றா என்பது நாடறியும்..
அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசி வருகிறார்.. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதியை மாற்றியவர் இபிஎஸ். ஆட்சியை காப்பாற்றிய பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர்.. விதிகளின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி என்னை நீக்கவில்லை.. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்.. எடப்பாடி பழனிசாமி தற்போது அவரை அதிகவின் தற்காகலிக பொதுச்செயலாளர் தான்.. அவரை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையர் அங்கீகரிக்கவில்லை.. தற்காலிக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி 53 ஆண்டுகாலம் கட்சியில் உள்ள என்னை நீக்கி உள்ளது கேள்விக்குறியானது.. என்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
Read More : “நான் B டீம் இல்ல.. இபிஎஸ் தான் A1 ஆக இருக்கிறார்.. ஏன் அதை பற்றி பேச மறுக்கிறார்?” விளாசிய செங்கோட்டையன்!



