தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்..
சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என அவர் மேற்கொண்ட எந்த முயற்சிக்கும் இபிஎஸ் சம்மதிக்கவில்லை.. மேலும் எக்காரணம் கொண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார்..
எனவே இத்தனை ஆண்டுகள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொறுமை காத்து வந்த அவர், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வரும் சசிகலா, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தார்…
பிப்ரவரி 24-ஆம் தேதி, அதாவது ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, சசிகலா தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.. தென் மாவட்டங்களின் முக்கியப் பகுதியான பசும்பொன் மண்ணில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி, அங்கு வைத்து கட்சியின் பெயர், கொள்கை மற்றும் கொடியை அறிமுகப்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் கமுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை சசிகலா வெளியிட்டார்.. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் கூடிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் வி.கே. சசிகலா. கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் கொண்ட கட்சி கொடியை சசிகலா அறிமுகம் செய்தார்.. புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சசிகலா அறிவித்தார்..
தான் ஆரம்பிக்கும் புதிய கட்சி திராவிட கட்சியாக அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.. எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுக்கும் கட்சியாக புதிய கட்சி செயல்படும் எனவும் சசிகலா அறிவித்தார்..
Read More : யாரோ எழுதிக் கொடுப்பதை மட்டுமே விஜய் பேசுகிறார்.. அவரின் அஜெண்டா இதுதான்.. திருமாவளவன் காட்டம்..!


