பஹல்காம் தாக்குதல் நடத்திய 3 பேரும் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிவித்தார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் நேற்று பிற்பகல் மக்களவையில் தொடங்கியது. விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று மக்களவையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் ஸ்ரீநகரில் உள்ள டாச்சிகாம் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சுலைமான் ஷா என்ற ஹாஷிம் மூசா மற்றும் இரண்டு பேர் ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் நேற்று நடந்த ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் “ “திங்கட்கிழமை ஸ்ரீநகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பஹல்காமுடன் தொடர்புடையவர்கள்.. சுலைமான் லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி, மேலும் ககாங்கிர் தாக்குதலிலும் ஈடுபட்டார்,” என்று அவர் கூறினார்.
நேற்று, பஹல்காம் தாக்குதலின் மூளையாகக் கருதப்படும் சுலைமான், பாதுகாப்புப் படையினர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற என்ற பெயரில் தொடங்கப்பட்ட திடீர் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசியைப் பயன்படுத்துவதைக் குறிக்கும் தொழில்நுட்ப சமிக்ஞையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் பின்னர் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன, இது அடையாளம் காணும் செயல்முறைக்கு உதவியது, நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி சட்டப்பூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன..