BREAKING | அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்..!! உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அங்கித் திவாரியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கித் திவாரி 2 முறை மனுத் தாக்கல் செய்த போதும், அதை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், வழக்கில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாட்டியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவோ அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது.

தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் உரிய அனுமதி பெறாமல் செல்லக் கூடாது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்து, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Read More : உங்களுக்கு வெட்கமே இல்லையா..? திமுகவின் வாக்குறுதி வெறும் காகிதம் மட்டும்தான்..!! விளாசிய அண்ணாமலை..!!

Chella

Next Post

வெறுப்பூட்டும் பேச்சு..! மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்கு பதிவு..!

Wed Mar 20 , 2024
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்த கருத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

You May Like