#Breaking : ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..

152404165 1

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 81. சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷிபு சோரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இந்த தகவலை அவரது மகனும், தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார்.


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று, நான் ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன்…” என்று பதிவிட்டுள்ளார்..

ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ஷிபு சோரன் ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினையால் அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக தேசிய தலைநகரில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

RUPA

Next Post

"அகரம் தொடங்கும்போது பணம் இல்லை.." அப்செட்டில் இருந்த அண்ணனுக்கு அண்ணி சொன்ன அட்வைஸ்..!! - நடிகர் கார்த்தி

Mon Aug 4 , 2025
When Agaram started, there was no money.. Jyothika's advice to her upset brother..!! - Actor Karthi
karthi jo

You May Like