Breaking : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.1,840 உயர்வு..! வெள்ளி ரூ.5000 உயர்வு..!

jewel n

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.230 உயர்ந்து, ரூ.14,050-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து, ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து, ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : திடீர் ட்விஸ்ட்..! விஜய்க்கு ஆதரவு கிடையாது..! திமுக கூட்டணியில் தொடர்வோம்.. IUML திட்டவட்டம்..!

RUPA

Next Post

" திமுக கூட்டணி முடிந்துவிட்டது.." காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி..!

Wed May 6 , 2026
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்கள் திமுக உடனான கூட்டணி தேர்தலுக்கானது, தேர்தல் முடிந்துவிட்டது.. திமுக கூட்டணியும் முடிந்துவிட்டது.. தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து நேற்றே முடிவெடுக்கப்பட்டுவிட்டது.. இந்த முடிவை கிரிஷ் சோடங்கள் இன்று வெளியிடுவார்.. இந்த சட்டமன்ற தேர்தல் திமுக அரசுக்கு எதிரான தேர்தலாக இருந்தது.. அதனால் 15 அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எதிரான மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.. என்.டி.ஏ கூட்டணியின் இடங்கள் […]
manickam tagore

You May Like