திடீர் ட்விஸ்ட்..! விஜய்க்கு ஆதரவு கிடையாது..! திமுக கூட்டணியில் தொடர்வோம்.. IUML திட்டவட்டம்..!

vijay

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.. எனவே அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.. மேலும்  எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..  


இந்த சூழலில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. அந்த வகையில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.. எனினும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று அக்கட்சி தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..

மேலும் ” திமுக – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேர்தல் நேரத்து உறவு இல்லை.. இது கொள்கை ரீதியான கூட்டணி.. முத்துவேல் கருனாநிதி ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம்.. நாளையும் இருக்கிறோம்.. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு கட்டுப்படுவோம்.. தவெகவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை..” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அழைத்தது தவெக..! மாறும் அரசியல் கணக்கு..

Wed May 6 , 2026
TVK invites Communist Party of India to join alliance..! Changing political calculus..
vijay india compunist 1

You May Like