BREAKING | அரசுப் பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! இனி 3-வது குழந்தைக்கும் சம்பளத்துடன் ஓராண்டு மகப்பேறு விடுப்பு..!! அமைச்சர் அறிவிப்பு..!!

Tn Govt Maternity Leave 2026

தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையின் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ், அரசு ஊழியர்கள், போட்டித் தேர்வர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் அறிவித்தார்.


➣ அரசுப் பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது குழந்தைப் பேறுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தி வழங்கப்படும்.

➣ டிஎன்பிஎஸ்சி (TNPSC), எஸ்எஸ்சி (SSC), ரயில்வே (RRB), வங்கி (IBPS) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்காக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் “வெற்றிப் பாதை” என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்படும்.

➣ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) பிரதான கட்டடத்துடன் இணைக்கும் வகையில், பொதுத் தாழ்வாரத்துடன் கூடிய கூடுதல் இணைப்புக் கட்டடம் ரூ.12.5 கோடி செலவில் கட்டப்படும்.

➣ ‘அ’ மற்றும் ‘ஆ’ அடிப்படைப் பயிற்சி நிலையம் மற்றும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் வகுப்பறைகள், தங்கும் விடுதிகள், கலையரங்கம் மற்றும் விருந்தினர் அறைகளைப் புனரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

➣ பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.3.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இதில் ரூ.1 கோடியில் நவீன கணினி மையமும், ரூ.2.25 கோடியில் 7 ஏக்கர் பரப்பளவில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகளுடன் கூடிய திறந்தவெளி விளையாட்டு அரங்கமும் அமைக்கப்படும்.

➣ மத்திய, மாநில அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் எளிதில் பயன்பெறும் வகையில், பயிற்சி மையங்களை அறிவுசார் மையங்களுடன் (Knowledge Centres) இணைக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.1.30 கோடியில் ஏற்படுத்தப்படும்.

➣ அரசு ஊழியர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்த, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நடத்தை விதிகள் உள்ளிட்டவை தொடர்பான மின்-கற்றல் பாடத்தொகுதிகள் உருவாக்கப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ‘திறன் 360’ (thiran360.tn.gov.in) இணையதளத்தில் சேர்க்கப்படும்.

➣ பொதுமக்கள் மற்றும் வணிகங்களுக்கான சான்றிதழ்கள், உரிமங்கள் உள்ளிட்ட 150 அரசு சேவைகளை இணையவழியில் மிக எளிமையாகப் பெறும் வகையில், ‘எளிமை ஆளுமை’ (SimpleGov) திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்டு வழங்கப்படும்.

Read More : தவெகவை போல் 2031இல் தமிழகத்தில் பாமக ஆட்சி..!! அன்புமணி ராமதாஸ் சூளுரை..!!

Next Post

திமுக நிலைமைதான் தவெகவுக்கும் வரும்..!! முதல்வர் விஜயை எச்சரித்த அண்ணாமலை..!!

Tue Aug 18 , 2026
சமூக வலைதளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக் கூட காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் துரதிருஷ்டவசமானது என முதலமைச்சர் விஜய்க்கு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் மக்களின் மாற்றுக்கருத்துகளையும் நியாயமான விமர்சனங்களையும் அலட்சியப்படுத்தியதே கடந்த காலங்களில் திமுக வீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக […]
Annamanai Vijay 2026

You May Like