fbpx

தொடரும் அவலம்!! பீகாரில் 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்து விபத்து!! – காரணம் என்ன?

பீகாரில் கடந்த 15 நாள்களில் மட்டும் 9 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின. இந்நிலையில், பத்தாவதாக இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் சரண் மாவட்டத்தில் 2 சிறிய பாலங்கள் இடிந்து விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 நாட்களில் பீகாரின் மதுபானி, அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பாலம் உள்பட10 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

மொத்தமாக கடந்த 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பாலங்கள் இடிந்து விழுந்த இடங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வுகளை விசாரிக்க பீகார் அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித்துறை மீது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.பீகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்ந்து நடந்து வருவது மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more | தடை செய்யப்பட்ட ரசாயனத்தை எண்ணையில் கலந்த பிரபல KFC நிறுவனம்..!! –  தனியார் உணவகத்தின் உரிமம் ரத்து

English Summary

In the last 15 days alone, 9 bridges collapsed in Bihar. In this case, another bridge has collapsed on the 10th.

Next Post

விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! கரும்பு நிலுவை தொகை வழங்க கடனுதவி - அரசாணை வெளியீடு

Fri Jul 5 , 2024
Agriculture Minister MRK Panneerselvam said that the sugarcane farmers have been given loan to pay the outstanding amount.

You May Like