fbpx

TnGovt: புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி…! வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின் 6-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்டு இதுவரை நான்கு பதிப்புகள் நடைபெற்றுள்ளது. தற்போது 6 -ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டான்சீட் திட்டம் 2021 ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 132 புத்தொழில் நிறுவனங்களுக்கு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழியாக பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஓராண்டு கால தொழில் வளர் பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை ஆகிய ஆதரவுகளும் வழங்கப்படும். இதன் பொருட்டு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது 3 சதவீத பங்குகளை உதவி பெறும் புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும். புத்தாக்க சிந்தனையுடன் செயல்படக்கூடிய, வருங்காலங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளைக் கொண்ட சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் யாவும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும்.மேலும், ஒன்றிய அரசின் டி.பி.ஐ.ஐ.டி தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியே, பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள விரும்பினாலும், ஏதேனும் வினாக்கள் இருந்தாலும் tanseed@startuptn.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Vignesh

Next Post

இன்றுமுதல் இயங்காது!… வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!

Thu Jan 25 , 2024
இன்றுமுதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேசிய மற்றும் தனியார் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் […]

You May Like