இன்றைய இளம் தலைமுறையின் மிகவும் துடிப்புடனும், மிகுந்த அறிவுடன் இருக்கும் வேளையில் பலர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வைத்து இயங்கி வருகின்றனர். யூடியூப் வாயிலாக பல கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் சம்பாதிக்கும் பல குழந்தைகள் இருக்கும் வேளையில் இந்த 12 வயது சிறுமி ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் தனக்கென ஒரு அடையாளரத்தை பெற்று மில்லியன் டாலர் சம்பாதிக்கும் நிலையில் 12 வயதில் ரிட்டையர்மென்ட் பெற முடிவு செய்துள்ளது.
இன்று Early Retirement என்பது மிகவும் பிரபலமாக இருந்தாலும் 12 வயதில் ஒரு இளம் தொழிலதிபர் ஓய்வு பெறுவது என்பது இணைய உலகை அதிர வைக்கும் செய்தியாகவே உள்ளது. யார் இந்த சிறுமி..? எப்படி மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெறும் வர்த்தகத்தை உருவாக்கினார்..? வாங்க பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவில் பிறந்த 12 வயதான தொழிலதிபரான பிக்ஸி கர்டிஸ் (Pixie Curtis), தனது வளர்ந்து வரும் தொழிலில் இருந்து விலகி பள்ளியில் கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளார். இதற்காக 11 வயது சிறுமி தனது 12வது பிறந்தநாளுக்கு தனக்கு விருப்பமான அனைவரையும் அழைத்து பர்த்டே பார்டி கொடுக்கும் கையோடு ஓய்வு பெறுவதையும் அறிவிக்க உள்ளார். 2021ல் பிக்ஸி கர்டிஸ் தனது தாய் உடன் இணைந்து நிறுவனத்தை துவஹ்கினார், முதலில் bow-களை மட்டுமே விற்பனை செய்து வந்த அம்மா பொண்ணு ஜோடி மக்கள் மத்தியில் ஃபிட்ஜெட்ஸ் ஸ்பின்னர்-க்கு அதிக டிமாண்ட் இருப்பது தெரிந்துக்கொண்டு கொரோனா காலத்தில் வர்த்தகத்தை துவங்கினர். இந்த முயற்சி பெரிய அளவில் பலன் அளித்தது.
பிக்ஸி கர்டிஸ்-ன் பிஸ்னஸ் ஆரம்பம் முதலே பெரிய அளவில் பிரபலமான நிலையில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்த 11 வயது சிறுமி ஒவ்வொரு மாதமும் 133,000 டாலர் தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 1,09,40,546 ரூபாய் சம்பத்திள்ளார், இதன் மூலம் வர்த்தகம் துவங்கி சில வருடங்களில் மில்லியனராகியுள்ளார் பிக்ஸி கர்டிஸ். 12 வயதில் பிக்ஸி கர்டிஸ் சொந்தமாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார். கர்டிஸ் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிஸ் சுமார் 1,40,000 பாலோவர்களை கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிக்ஸி கர்டிஸ் தனக்கு மட்டும் அல்லாமல் தன் குடும்பத்திற்கும் அதி ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொடுத்துள்ளார்.