fbpx

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விசிக கவுன்சிலர்…..! சென்னையில் பரபரப்பு….!

நிதி நிறுவன மோசடி வழக்குகள் குறித்து திருச்சியில் விசிக கவுன்சிலர் உட்பட 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது ஆருத்ரா ஐ எப் எஸ் எல்வின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதிலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 14,168 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்து மோசடி செய்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள் முகவர்கள் வந்துட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதாவது பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இத்தகைய நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்குகளில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், தற்சமயம் திருவள்ளூர் வரதராஜ நகர் சசிகுமார், ராணிப்பேட்டை சோளிங்கர் உதயகுமார், நெமிலி வட்டம் சயனபுரம் சதீஷ், காவேரிப்பாக்கம் அசோக்குமார், வாலாஜாபேட்டை தாலுக்கா முனுசாமி, சென்னை மாலதி, வேலூர் காட்பாடி ஆவின் செங்கல்பட்டு காட்டாங்குளத்தூர் செல்வராஜ் உள்ளிட்டோரை கைது செய்து இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று திருச்சி மன்னார்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு, மதுரை, சிவகங்கை, திருப்பூர், ராமநாதபுரம், சென்னை மற்றும் புதுவையில் செயல்பட்ட எல்பின் நிறுவனத்தைச் சேர்ந்த திருச்சி பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதோடு ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி குறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் சுமார் 7000 பேரிடம் 240 கோடி ரூபாய் வரையில் வசூலித்து மோசடி செய்திருக்கிறார். இதற்காக 24 கோடி ரூபாய் வரையில் கமிஷன் பெற்று இருக்கிறார் இந்த வழக்குகளில் தலைமறைவாக இருக்கின்ற மேலும் சிலரை நாங்கள் தீவிரமாக தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றவர்களை பிடிப்பதற்கு சர்வதேச காவல்துறையினரின் உதவியை நாடியிருக்கின்றோம். மோசடி வழக்குகளில் சிக்கியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது .

ஹிஜாயு, ஐ எஃப் எஸ் நிறுவனங்களின் மீது முதல் கட்ட ஒற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது ஆருத்ரா நிதி நிறுவனம் மீது 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கின்றோம். இதனை தொடர்ந்து, புலன் விசாரணை நடைபெற்று வருகிறது இவ்வாறு ஐ ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

மேலும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் என்பவர் திருச்சி மாநகராட்சி 17 வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

சென்னை காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் நிரந்தர பணி நீக்கம்…..! சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு…..!

Sat May 27 , 2023
சென்னை காவல் துறையில் புனித தோமையர்மலை மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணிடம் தான் உயர் போலிஸ் அதிகாரியாக இருப்பதாகவும், அந்த பெண்ணின் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்து அந்த பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவி போல் இருவரும் […]

You May Like