fbpx

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தனர், ஒரு விசைப்படகையும் கைப்பற்றிச் சென்றனர்.

ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 10 பேரை எல்லை கடந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 10 மீனவர்களுடன் ஒரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

English Summary

10 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy near Katchatheevu

Vignesh

Next Post

காங்கோவின் மோதல்: இந்தியர்களுக்கு அவசர எச்சரிக்கை; பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்!. இந்திய தூதரகம்!

Mon Feb 3 , 2025
Congo conflict: Urgent warning to Indians; Go to safe places!. Indian Embassy!

You May Like