பிரதமரின் நுண்ணீர் பாசனக் திட்டம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் அனைத்து வகையான பயிர்களுக்கும் பிரதமரின் நுண்ணீர் பாசனக் திட்டம் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி மற்றும் அதிக மகசூல் எடுக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் நுண்ணீர் பாசனக் கருவிகள் அனைத்தையும் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். சொந்த பயன்பாடின்றி வேறு எவருக்கும் எந்த சூழ்நிலையில் விற்கக் கூடாது. இதனை மீறி, விற்கப்படும், நுண்ணீர் பாசனக் கருவிகளை பழைய இருப்புக்கடை உரிமையாளர்கள் வாங்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. நுண்ணீர் பாசனக் கருவிகள் அரசின் பொருள் என்பதால் மீறி விற்கப்படும் நிலையில் கண்டறியப்பட்டால் அவ்விவசாயிக்கு வழங்கப்படும்
அரசின் பிற மானியத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல, அரசின் மானியத் திட்டத்தில் பெறப்பட்ட நுண்ணீர் பாசனக் கருவிகளை பழைய இருப்பு மற்றும் பிளாஸ்டிக் கடை உரிமையாளர்கள் வாங்கியது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.