fbpx

ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் – செந்தில் பாலாஜி

சென்னை புதுப்பேட்டையில் சேப்பாக்கம் பகுதி 63வது வட்ட திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தேர்தல் வாக்குறுதலில், சுமார் 80 சதவீதம் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் குறிப்பாக கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்தை தலைவருக்கு தலா 4000 வழங்கியது. பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய சலுகை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளில் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இரண்டு கோடியே 66 லட்சம் மின் இணைப்புகள் உள்ளதாகும், அதில் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண் உடன் இணைக்கும் பணி முடிந்துள்ளது. மின்சார வாரியத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். குறிப்பாக ஒருவர் எத்தனை மின்னிணைப்புகள் வைத்திருந்தாலும் அத்தனையும் மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் தடையின்றி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் சென்னை திமுக மற்கு மாவட்ட செயலாளர் சிட்டு அரசு சேப்பாக்கம் தொகுதி கழக செயலாளர் மதன் மோகன் 63வது வட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளீட்டு பலர் கலந்து கொண்டனர்

Kathir

Next Post

பொறியியல் பணிகள் தேர்வு முடிவுகள்...! வெளியான முக்கிய அறிவிப்பு...!

Tue Dec 6 , 2022
பொறியியல் சர்வீஸ் தேர்வு 2021-ன் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 28 விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்களை நிரப்பலாம் என மத்திய தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. பின்வரும் 4103068 என்ற பதிவு எண் கொண்ட விண்ணப்பதாரர் மட்டும் உத்தேசப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். விண்ணப்பதாரர்களின் நியமனம் தொடர்பான முடிவு உத்தேசமானதாக இருப்பதாகவும், தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு முடியும் வரை முடிவுகள் வெளியிடப்படாது […]

You May Like