fbpx

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட குட்நியூஸ்..

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM” திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் திறனறி தேர்வு, திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் 12ம் வகுப்பை நிறைவு செய்யும் வரையிலும் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் “ தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர்கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் வாயிலாக 10-ம் வகுப்புப் பயிலும் (500 மாணவர், 500 மாணவியர்) 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பினையும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். அவர்களுடைய 12-ம் வகுப்பை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 வழங்கப்படும்.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000 வீதம் உதவித்தொகையும் பெறுவார்கள்.. தேர்வாகும் 1000 மாணவர்களுக்கும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும்..” என்று தெரிவித்தார்.. மேலும் லும், இம்மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர் பயிற்சிகளும் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும் போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000/- வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்..” என்று தெரிவித்தார்.

Maha

Next Post

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்?... அப்போ இதை முதல்ல படிங்க!.. கவனத்தில் கொள்வது அவசியம்!

Thu Apr 6 , 2023
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் தற்போது காணலாம். தினமும் போதுமான அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கிரகித்து தேவையான சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.அதிக அளவு கார்போஹைட்ரேட் […]

You May Like