fbpx

இந்தியாவில் ஒரு நாளில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் 11,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.. நேற்று ஒரு நாளில் கொரோனா காரணமாக 27 பேர் உயிரிழந்தனர்.. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 53,720 ஆக உள்ளது… இறப்பு விகிதம் 1.19% ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களில் அதிக பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.

Maha

Next Post

மாணவர்களே இந்த செய்தி உங்களுக்காக தான்…..! தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு எதற்காக தெரியுமா….?

Sat Apr 15 , 2023
நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனி நாளை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எதிர்வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like