fbpx

10, 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு… இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்…! அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதன்படி 11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 4-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 26-ம் தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகின்றன. இந்நிலையில் அரசு தேர்வுத் துறை சார்பில் பொதுத் தேர்வு பணிகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 200-க்கும்மேற்பட்ட வினாத்தாள், விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அமைத்திருக்க வேண்டும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது.

செல்போன்களை அணைத்து, தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும்படையில் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு: வதந்தி, போலி தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை..!

Wed Feb 14 , 2024
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளன. இரண்டு தேர்வுகளுமே பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளன. 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற […]

You May Like