fbpx

Tn govt: 10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் இன்று வெளியீடு…!

10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் இன்று வெளியிடப்படும்.

இது குறித்து பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

English Summary

10th, 11th and 12th sub-exam revaluation list release today

Vignesh

Next Post

நெடுஞ்சாலை துறை மறு சீரமைப்பு.. 5 பேர் கொண்ட குழுவை அமைத்த தமிழக அரசு...!

Fri Aug 30 , 2024
The government has appointed a five-member committee to conduct a detailed study and submit a report on the restructuring of the highway sector.

You May Like