fbpx

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்..!! பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ கடும் எச்சரிக்கை..!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு திருத்துதல் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு நடத்தி முடித்து விடைத்தாள்களையும் உரிய முறையில் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 12 நாட்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப தினமும் ஆசிரியர்கள் தலா 20 முதல் 25 விடைத்தாள்களை திருத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் விடைத்தாள் திருத்துதலுக்கு ஆசிரியர்களை தவறாமல் பணிக்கு அனுப்ப வேண்டும். இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து மற்றும் அபராதம் வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த புதிய வழக்கு….!

Sun Feb 19 , 2023
மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் தேர்வை தகுதியாக வைத்து சட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியன் தாக்கல் செய்திருக்கின்ற மனுவில் நீட் தேர்வு அறிமுகம் மற்றும் அதனை தொடர்வது உள்ளிட்டவை தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். நீட் தேர்வை அறிமுகம் செய்தது கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாக இருப்பதாகவும், மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களில் மாணவர்களை அனுமதிக்கும் […]

You May Like