fbpx

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லையா…? உடனே ஆன்லைன் மூலம் செய்து முடிக்க வேண்டும்…!

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெறும்‌ முறை கைவிடப்பட்டு, ஆன்லைனில்‌ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள்‌ வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி செய்யும்‌ பொருட்டு மதிப்பெண்‌ சான்றிதழ்‌, ஆதார்‌ அட்டை எண்‌, குடும்ப அட்டை எண்‌, கைப்பேசி எண்‌ மற்றும்‌ மின்னஞ்சல்‌ முகவரி ஆகிய விவரங்களுடன்‌ மதிப்பெண்‌ சான்று வழங்கப்படும்‌ நாளன்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது & சேவை மையத்தையோ அணுகிபதிவு செய்து கொள்ளலாம்‌.

மேலும்‌ https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம்‌வழியாகவும்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது. பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும்‌ அனைத்து மாணவ மாணவியர்கள்‌ இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

“ உண்மையை பேசி ரியல் ஹீரோவுக்கு ஜெயில்...” சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு குவியும் ஆதரவு..

Fri Sep 16 , 2022
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சவுக்கு சங்கருக்கு ஆதரவாக டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் யூ டியூப் வீடியோக்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து அதிரடியான கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் பிரபலமானவர்.. சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் நீதித்துறையை விமர்சித்திருந்தார்.. அதாவது ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று […]

You May Like