அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆண்டிற்கான சேர்க்கைக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆண்டிற்கான சேர்க்கைக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 07/06/2024 கடைசி நாளாகும் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும்.
Mechanic Motor Vehicle (SCVT) கம்மியர் மோட்டார் வாகனம், Mechanic Refrigeration and Air-Conditioning Technician (SCVT) குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், Electronics Mechanic (SCVT) கம்மியர் மின்னணுவியல், Mechanic Electrical Vehicle (NCVT) , Advanced CNC Machining Technician (NCVT) அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு இரண்டு ஆண்டு கால பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், Manufacturing Process Control and Automation (NCVT) மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேசன் மற்றும் Industrial Robotics and Digital Manufacturing Technician (NCVT) (இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்) பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 750/- (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்). விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, இரண்டு செட் சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இலவச சேப்டி ஷீ. இலவச பஸ் பாஸ் ஆகியன வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9789242292, 9499937449, 9445943451.