சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதே சமயம், பெண்கள் தங்களின் சொந்த வீடுகளிலேயே பலாத்காரம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம், மகராஜ்கஞ்ச் பகுதியில் 11 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும், சிறுமி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் தாய் அவரது பெற்றோர் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
இதனால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் மீது அவரது சொந்த தந்தைக்கு மோகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது சொந்த மகளான 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால், விஷம் கொடுத்து கொலை செய்து விடுவதாக கூறி தனது மகளை மிரட்டியுள்ளார்.
ஆனால் சிறுமி, தனது பெற்றோர் வீட்டிற்க்கு சென்ற தாய், திரும்பி வந்த உடன். தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், நடந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
Read more: பாஜக நிர்வாகி கொடூரமாக வெட்டிக் கொலை.. முன் விரோதமா..? போலீசார் தீவிர விசாரணை!