fbpx

செம திட்டம்…! மத்திய அரசின் Group தேர்வுக்கு இலவச பயிற்சி…! நிதி ஒதுக்கீடு விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு….!

இலவசப் பயிற்சி மற்றும் துணை திட்டத்தின் கீழ் மொத்தம் 1,19,223 சிறுபான்மை மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

சீக்கியம், ஜெயின், முஸ்லிம், கிறிஸ்தவர், பௌத்தம், பார்சி ஆகிய ஆறு அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்நுட்ப, தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கான தகுதித் தேர்வுகள் மற்றும் குரூப் ‘ஏ’ தேர்வுக்கு ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி மூலம் உதவுவதற்காக சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2007-ம் ஆண்டில் இலவச பயிற்சி மற்றும் துணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசு துறைகளின் கீழ் ‘பி’, மற்றும் ‘சி’ சேவைகள் மற்றும் பிற சமமான பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும். கடந்த ஐந்தாண்டுகளில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள். செய்யப்பட்டுள்ளது. அதன் படி, இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,585 மாணவர்கள் உட்பட 1,19,223 சிறுபான்மை மாணவர்கள் / விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000!… டோக்கன் பெறாதவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு!

Sun Dec 17 , 2023
டோக்கன் கிடைக்க பெறாத மற்றும் ரேஷன் கார்டு இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணம் கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் […]

You May Like