fbpx

தமிழகம் முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்…!

தமிழகம் முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக இருந்த கே.தர்பகராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தோட்டக்கலைத் துறை இயக்குனராக இருந்த ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டக்கலை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணை ஆணையராக இருந்த வி.ஆர்.சுப்புலட்சுமி தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ரவிச்சந்திரன் உயர்கல்வித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனராக எம்.லட்சுமி, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை ஆணையராக ஜி. பிரகாஷ், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின்னணு கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த எஸ்.அருண்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனராக இருந்த கமல் கிஷோர் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Vignesh

Next Post

நாளை முதல் ஆரம்பம்... TNPSC தேர்வர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...! முழு விவரம்...

Sun Jan 28 , 2024
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், […]
செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

You May Like