இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஹாப் எலக்ட்ரிக் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஹாப் லியோவின் (Hop Leo) விலை ரூ. 97,000 ஆகும்..
இந்த அதிவேக மின்சார ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை இயக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. அதிவேக மின்சார ஸ்கூட்டரில் 2.1 kWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது என்றும் 850-வாட் ஸ்மார்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 2.5 மணி நேரத்தில் 0-80 சதவிகிதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஹாப் லியோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 ரைடிங் மோடுகள் உள்ளன, இதில் ஈகோ, பவர், ஸ்போர்ட் மற்றும் ரிவர்ஸ் ஆகிய விருப்பங்கள் உள்ளன.. இந்த மின்சார ஸ்கூட்டரின் லோடிங் திறன் 160 கிலோ ஆகும். இதில் ஜிபிஎஸ் டிராக்கருடன் எல்சிடி டிஜிட்டல் கன்சோலும் உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டர் கருப்பு, வெள்ளை, சாம்பல், நீலம் மற்றும் சிவப்பு ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.