fbpx

மாணவர்களுக்கு வருடம் ரூ.12000 உதவித்தொகை!! உடனே இதை செய்யுங்கள்!!

பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினர்,இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் போன்ற மதத்தை சார்ந்தவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இதற்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு பலன் கிடைக்கும். விண்ணப்பத்தவறிய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.  www.schplorship.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான கடைசி நாள் நவம்பர் 30 என்பதை மறந்துவிட வேண்டாம். உடனடியாக மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்து வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் உங்களுக்கு தகவல் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் ஆண்டுக்கு ரூ.12,000 பணத்தை நேரடியாக பெறமுடியும்.

Next Post

நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து…!!

Fri Nov 18 , 2022
நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நாளை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறொரு நாளைக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி ஏற்பட்டதால் […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு...! கட்டணமில்லா பயிற்சி..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

You May Like