fbpx

கோவை அருகே 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில்…..! சரணடைந்தவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டம்….!

கோவை பீளமேட்டில் இயங்கி வந்த யு டி எஸ் என்ற நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி சுமார் 76 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் வழங்கினர்.

அதன் பேரில் டிஎஸ்பி முருகானந்தம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் மொத்த மோசடி தொகை 1300 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கின்ற நிலையில் 31 பேர் மட்டுமே புகார் புகார் வழங்கியிருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து, 76000 பேரின் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சேகரித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு நடுவே தலைமறைவாக இருந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் சூலூரை சேர்ந்த ரமேஷ்(30) என்பவர் கடந்த 6ம் தேதி கோவை டான் ஃபிட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சரணடைந்த ரமேஷை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை காவல்துறையினர் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

Next Post

விழுப்புரம் அருகே சிறுமியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை…..! மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

Sat Jun 10 , 2023
விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் என்பவரின் மகன் ஜெயஸ்ரீ 15 அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2020ஆம் வருடம் மே மாதம் ஒன்பதாம் தேதி ஜெயஸ்ரீ வீட்டில் தனியே இருந்த போது திடீரென்று வீட்டிற்குள் இருந்து புகை வந்தது அந்தப் பகுதியை மக்கள் அங்கு சென்று பார்த்த போது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், […]

You May Like