fbpx

SBI வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.64,480 வரை..!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு (SBI Clerk Notification 2024) குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணியிடங்களில் எஸ்சி 63, எஸ்டி 2, ஒபிசி 91, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 33, பொதுப் பிரிவினருக்கு 150 என்ற வகையில் நிரப்பப்படுகிறது. வயது வரம்பை பொறுத்தவரை கிளார்க் பிரிவு பணிக்கு 01.04.2024 தேதியின்படி, 20 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது. அதிகபட்சம் 28 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. விண்ணப்பதார்கள் 02.04.1996 தேதிக்கு முன்பும், 01.04.2004 தேதிக்கு பின்பும் பிறந்திருக்கக்கூடாது.

கல்வித் தகுதியை பொறுத்தவரை, விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இரண்டு பட்டப்படிப்புகள் (IDD) இணைத்து பட்டப்பெற்றவர்கள் 31.12.2024 தேதி அல்லது அதற்குள் கல்வியை முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டில் இருக்கும் மாணவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பட்டப்படிப்பு முடிவு தேதி டிசம்பர் 31ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கிளார்க் பிரிவில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் அடிப்படை சம்பளமாகவே ரூ.26,730 வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை தகுந்த தகவல்களுடன் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடங்கும் நாள் – 17.12.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.01.2024

முதல்நிலை தேர்வு – பிப்ரவரி 2025

Read More : பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள்..!! நைசாக பேசி காரில் அழைத்துச் சென்று பலாத்காரம்..? கல்லூரி உதவி பேராசிரியர் வெறிச்செயல்..!!

English Summary

The notification for the recruitment of Junior Associates in the Customer Support and Sales Division (SBI Clerk Notification 2024) in the public sector bank SBI Bank has now been released.

Chella

Next Post

சர்க்கரை நோயின் அசாதாரண அறிகுறி.. இதை அலட்சியமா எடுத்துக்காதீங்க.. மருத்துவர்கள் வார்னிங்..

Tue Dec 17 , 2024
If the sugar level is high, many symptoms can occur in the body. But there is one unusual symptom

You May Like