fbpx

13,811 பேருக்கு கொரோனா தொற்று!!! மீண்டு சீனாவை தாக்கும் கொரோனா..?

சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படையாக இந்த தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு 16,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவின் உள்ளூர் நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு சற்று குறைந்து 13,811 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அறிகுறி இல்லாத கொரோனா தொற்று 10,729 பேருக்கு உறுதியாகி இருப்பதாகவும், 3,082 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருப்பதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,235 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,71,463 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

’இளைஞர்களே இளம்பெண்களே’..!! திருமண மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி..? சைபர் கிரைம் எச்சரிக்கை..!!

Sun Dec 11 , 2022
திருமண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்கி தவிக்காமல் இருப்பது எப்படி? என காவல்துறையினர் அறிவுரைகள் வழங்கியுள்ளனர். உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில், மோசடிகளும் புதுவிதங்களில் மாறி கொண்டு தான் இருக்கின்றன. மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் திருமண மோசடிகளை அரங்கேற்றி வரும் கும்பலை காவல்துறையினர் கைது செய்து வந்தாலும், வரன் பார்த்தும் நடக்கும் திருமணங்களிலும் மோசடி கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. திருமண மோசடிகள் அரங்கேறுவது எப்படி? […]

You May Like