fbpx

“ஷூவை நக்க வைத்து.. பாலியல் சித்திரவதை.”! 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.! தாய்க்கு அனுப்பப்பட்ட அந்தரங்க வீடியோ.!

டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸ் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவனை, அவரது நண்பர்கள் மூவர் கத்தி முனையில் மிரட்டி தங்களது காலணிகளை நக்க வைத்து, பின்னர் இயற்கைக்கு மாறான உடலுறவிலும் ஈடுபடுத்தியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், 14 வயது சிறுவன் டெல்லியில் உள்ள ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிவிட்டு வீடு திரும்பிய போது, அவரது 12 முதல் 14 வயதுடைய நண்பர்கள் மூவர் அவரை இடைமறித்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அந்த சிறுவனை கத்தி முனையில் மிரட்டி, தனது காலணிகளை நக்குமாறு செய்துள்ளனர். பின்னர் இயற்கைக்கு மாறான உடலுறவிலும் அந்த சிறுவனை ஈடுபடுத்தியுள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மற்றொரு நண்பர், அந்த வீடியோவை சிறுவனின் தாய்க்கும் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து துடித்துப் போன அந்த தாய், ஞாயிற்றுக்கிழமை அன்று இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல்துறை துணை ஆணையர் (தெற்கு) அங்கித் சவுகான் கூறுகையில், அந்த சிறுவனுடன் இருந்த முன்விரோதம் காரணமாக, இதனை மூவரும் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனைப் பற்றி வெளியிலும் கூறக்கூடாது என்றும் அந்த சிறுவனை மூவரும் அச்சுறுத்தியுள்ளனர். அந்த சிறுவனை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

அந்த மூவர் மீதும், ஐபிசியின் 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 12 (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Post

அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் குட்நியூஸ்!… என்ன தெரியுமா?

Tue Jan 30 , 2024
2024ம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஈட்டிய விடுப்பு 240 நாட்களில் இருந்து 300 நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூடவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இறுதி பட்ஜெட் இதுவாகும். வரும் ஏப்ரல் […]

You May Like