சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் ஒரு 14 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமி தனக்கு எந்த விதமான பாலியல் தொந்தரவும் நடைபெறவில்லை. என்னுடைய தாய்க்கும், அந்த வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. அவரை பழிவாங்குவதற்காகவே அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக என்னுடைய தாய் பொய்யான புகாரை வழங்கி இருக்கிறார். என்று அந்த சிறுமி ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த சிறுமியின் தாயாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் உண்மையை கூறிய சிறுமிக்கு அவருடைய தாயாரால் பாதிப்பு ஏற்படும் என்று கருதி அந்த சிறுமையை மீட்டு அரசு காப்பகத்தின் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதற்கு நடுவே சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பொய் புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது