fbpx

“அப்பா, என்ன தொடாதீங்க” கெஞ்சிய மகள்; வீட்டில் யாரும் இல்லாத போது தந்தை செய்த காரியம்..

பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் கௌஷிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் இவரது மனைவியும், பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைக்கு தற்போது 14 வயது ஆகிறது. இந்நிலையில், வளர்ப்பு தந்தைக்கு தான் வளர்த்த குழந்தை மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, இது குறித்து யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் வளர்ப்பு தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் படி, மகளை பலாத்காரம் செய்த வளர்ப்புத்தந்தைக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Read more: ”வாரம் ஒரு உயிர் போகுது”..!! ”இதைக் கவனிப்பதை விட அமைச்சருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருக்கு”..? அண்ணாமலை கண்டனம்

English Summary

14 years old girl was sexually abused by her step father in punjab ludhiana

Next Post

Video : நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..! ரேஸில் பங்கேற்பாரா?

Tue Jan 7 , 2025
Actor Ajith was practicing for a car race when his car crashed into a barrier and caused a sensation.

You May Like