fbpx

அதிர்ச்சி!!! தனியாக நின்ற 14 வயது சிறுவன்; பைக்கில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்..

சமீப காலமாக பாலியல் பலாத்கார செய்திகளை நம் அதிகம் கேள்விப்படுகிறோம். இதனால் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர், பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டு பயத்தில் இருந்தனர். இதற்க்கு ஆண் பிள்ளையை பெற்றிருக்கலாம் என்று கூட பலர் நினைத்தனர். ஆனால் தற்போது, ஆண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடமாக தமிழ் நாடு மாறி வருகிறது. ஆம், சமீபத்தில் பள்ளி செல்லும் சிறுவனுக்கு அவரது பள்ளி ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன் தனியாக நின்றுக் கொண்டிருப்பதை கவனித்த வாலிபர் ஒருவர் சிறுவனை தன்னுடன் பைக்கில் வருமாறு அழைத்துள்ளார். சிறுவனும் காரணம் தெரியாமல், தனது ஊர் தானே என்ற நம்பிக்கையில் அந்த வாலிபருடன் சென்றுள்ளான். பின்னர் அந்த வாலிபர் சிறுவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் அத்திமீறலில் ஈடுபட்டுள்ளார்‌. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான்.

பின்னர் சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனுக்கு பாலியல் தொல்லை யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: “குழந்தை இருந்தா கள்ளக்காதலன் கூட சந்தோசமா இருக்க முடியாது” பெற்ற மகளை கொடூரமாக கொன்ற தாய்..

English Summary

14 years old school boy was sexually abused by an young man in erode

Next Post

உயிரிழந்தவர்களின் தியாகம் வீண் போகாது.. 2026-க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்..!! - அமித்ஷா உறுதி

Mon Jan 6 , 2025
Amit Shah reacts to Naxal attack in Chhattisgarh: ‘Will eliminate Naxalism from India by March 2026’

You May Like