fbpx

15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள்..!! விவரங்களை சமர்ப்பிக்க அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் அனைத்து அரசு துறைகளிலும் 15 ஆண்டுகளை கடந்து பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனை செயல்படுத்த அவகாசம் வழங்கக் கோரி தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரசு துறைகளில் உள்ள பழமையான வாகனங்களின் பயன்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அனைத்து துறை சார்ந்த 2ஆம் நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகனங்களை கழிவு செய்வதால் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் குறித்து சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். வாகன அழிப்பு கொள்கை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து அரசு துறைகளிலும், 15 ஆண்டுகள் கடந்து பயன்பாட்டில் உள்ள வாகன விவரங்களை சமர்ப்பிக்குமாறு அலுவலர்களிடம் போக்குவரத்து ஆணையர் கேட்டுக் கொண்டார்.

Chella

Next Post

ஊழலில் திளைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியால் கர்நாடக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது…..! பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு…..!

Sun May 7 , 2023
கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாளை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது இத்தகைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 26 கிலோ மீட்டருக்கு வாகன பேரணியை மேற்கொண்டார். சாலை மூலமாக பேரணி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு வழியெங்கும் பாஜகவினர் மலர்களை தூவி உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.இந்த பேரணி நடைபெற்ற போது சுமார் 8 […]
அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்..!! இந்த பிரச்சனையை கையாள்வது சிரமம்தான்..!! ஷாக் கொடுக்கும் பிரதமர்..!!

You May Like