fbpx

200 ரூபாய்க்காக 15 வயது மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை.! யோகி ஆளும் உபியில் நடந்த கொடுமை.!

கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்காக 15 வயது மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் ஆறு இளைஞர்களை தேடி வருகின்றனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனுக்கு 200 ரூபாய் கடன் கொடுத்திருக்கிறான். கடன் வாங்கிய சிறுவன் திருப்பி தராததால் தன்னுடைய பணத்தை தருமாறு கேட்டிருக்கிறான் இந்த மாணவன். இதனால் ஆத்திரமடைந்த கடன் வாங்கிய மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த இளைஞனை ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான் .

பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த மாணவனை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும் வலுக்கட்டாயமாக மது அருந்தவும் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அடித்து கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த மாணவன் இந்த சம்பவம் தொடர்பாக தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறான். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் மாணவனை கொடுமைப்படுத்திய 6 நபர்களை தேடி வருகின்றனர்.

Next Post

’இனிமேல் இயற்கை பேரிடர் அடிக்கடி வரும்’..!! ’வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிடுங்க’..!! அன்புமணி ராமதாஸ் காட்டம்..!!

Fri Dec 22 , 2023
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ”சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை வேஸ்ட். வானிலை மையம் செய்கிற வேலையை 5ஆம் வகுப்பு மாணவன் செய்வான். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள். இது எங்களுக்கு தெரியாதா? உலகமே நவீன தொழில் […]

You May Like