fbpx

மகிழ்ச்சி செய்தி…! மூத்த குடிமக்கள் உறுப்பினராக சேர ஆண்டுக்கு ரூ.150 கட்டணம்…! அரசு அங்கீகாரம் அவசியம்…!

மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தில் இருந்து பொதுமக்கள் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு சென்று படிப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.

மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு சென்று படிப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளது. குடும்ப உறுப்பினர்களாக நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு பெற்றோர், குழந்தைகள் 2 பேருக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.500 மற்றும் ஆண்டு சந்தாவாக ரூ.200 சேர்த்து மொத்தம் ரூ.700 செலுத்த வேண்டும். இவர்கள் ஒரே நேரத்தில் 5 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம்.

தனி நபருக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.250 மற்றும் ஆண்டு சந்தா ரூ.100 சேர்த்து ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வீட்டுக்கு ஒரே நேரத்தில் 4 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் கட்டணம் ரூ.100 மற்றும் ஆண்டு சந்தா ரூ.50 சேர்த்து ரூ.150 கட்டினால் போதும். இவர்கள் ஒரே நேரத்தில் 4 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம். மாணவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் ரூ.150 மற்றும் ஆண்டு சந்தா ரூ.75 சேர்த்து ரூ.225 செலுத்தினால் ஒரே நேரத்தில் 5 புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.

உறுப்பினராக சேர விரும்புவோர் https://www.kalaignarcentenarylibrary.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை நிரம்பி, 2 புகைப்படம், அரசு அங்கீகாரம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்றே கடைசி!… நாளை முதல் எல்லாமே மாறுகிறது!… என்னென்ன தெரியுமா?

Wed Jan 31 , 2024
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளதாலும், மாத தொடக்கம் என்பதாலும் நாளை முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகமாகவுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) மிகப் பெரிய மாற்றம் வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டத்தின் விதிமுறை மாற்றப்படுகிறது. பென்சன் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவின் படி இனி தேசிய பென்சன் திட்ட […]

You May Like