fbpx

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500..! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்..

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு (CBSE/ICSE- உட்பட) நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு தரநிலையிலுள்ள தமிழ்பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.

அதன்படி பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் (CBSE/ICSE-உட்பட) www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக நாளை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்

Kathir

Next Post

”விநாயகர் சிலைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்”..!! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு..!!

Mon Sep 4 , 2023
தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டது மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் […]

You May Like