திருவள்ளூர் அருகே பட்டரைப் பெரும்புதுார் முருகன் கோவிலில், பழங்கால சுரங்கப்பாதை இருப்பதை, தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த பட்டறைைபெருமந்தூர் ஊராட்சியில் உள்ள கோயிலானது 1500 ஆண்டுகள் பழமையானது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கோயிலை இடிக்கக்கூடாது என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் லோகநாதன் தலைமையில் தொல்லியல் அதிகாரிகள் இந்த கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முருகன் கற்சிலை அமைந்துள்ள கோயிலின் மண்டபத்திற்குள் சுரங்கப்பாதை இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பட்டறைைபெருமந்தூர் பகுதியில் ஏற்கனவே 3 கட்டமாக தொல்லியல் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 1000 மேற்பட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக அப்பகுதியில் சங்க காலத்தில் செங்கற்கலால் கட்டப்பட்ட கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.