fbpx

15000 ரூபாய் சம்பளத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….!

நாள்தோறும் நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும், பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த விதத்தில், இன்று, பேங்க் ஆப் பரோடா வங்கி நிறுவனமானது, அந்த வங்கியில் காலியாக இருக்கின்ற correspondent supervisors பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வங்கியில், இந்த பணிக்கு மூன்று காலி பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில், MSc(IT), BE (IT), MCA, MBA ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதோடு, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் குறைந்தபட்ச வயது, 21 என்றும், அதிகபட்ச வயது 45 முதல் 65 வரையில் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 10,000 முதல், 15,000 வரையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அத்துடன், ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், இதன் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து வரும் 11/9/2023 அன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமான முகவரிக்கு, அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Next Post

’இது என்ன புது புரளியா இருக்கு’..!! அசைவம் சாப்பிட்டால் நிலச்சரிவு, மேகவெடிப்பு நிகழும்..!! சொன்னது யார் தெரியுமா..?

Fri Sep 8 , 2023
இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான மழையால் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிவன்கோயில் அப்படியே புதைந்துவிட்டது. இடிபாடுகளில் இருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டன. மண் குவியல்களிலும் நிறைய பேர் சிக்கியுள்ளனர். செக்லி […]

You May Like